நடிகர்கள் விஜய், அஜித், தனுஷ் குறித்து பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் ஒரு வார்த்தையில் அட்டகாசமான பதிலை கூறியது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாலிவுட் கிங் என்றழைக்கப்படும் ஷாரூக் கான் இன்று ரசிகர்களின் கேள்விக்கு டிவிட்டரில் பதிலளித்தார். ட்விட்டரில் அவ்வப்போது, #AskSRK என்ற ஹேஷ்டேகில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளித்து வருவது ஷாரூக்கின் வழக்கம்.

அதன்படி, இன்று காலையில் ஷாருக் கான் தனது ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல மொழிகளையும் சேர்ந்த சினிமா ரசிகர்கள் ஷாருக்கானிடம் தங்களின் மனதில் தோன்றிய கேள்விகளை கேட்டனர்.

இந்த #AskSRK ஹேஷ்டேக்கில் தமிழ் சினிமா ரசிகர்களும் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற தனுஷ் ரசிகர் ஒருவர், தனுஷ் குறித்து ஒரு வார்த்தையில் சொல்லுங்கள் என்றார். அதற்கு பதிலளித்த ஷாரூக் கான் ஐ லவ் ஹிம் என்று பதிலாளித்தார். ஷாரூக் கானின் இந்த பதிலை பார்த்த ரசிகர்கள் அதனை அதிகளவு லைக் செய்ததோடு ரீட்விட்டும் செய்து வருகின்றனர்.

இதனை பார்த்த அஜித் ரசிகர்கள், அஜித் குறித்து ஒரு வார்த்தையில் சொல்லுங்கள் என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த ஷாரூக் கான், என்னுடைய நண்பர் என நச்சென கூறினார்.

இப்படி ஒரு விஷயம் நடக்கும் போது விஜய் ரசிகர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா என்ன? இதில் பங்கேற்ற விஜய் ரசிகர் ஒருவர் ஷாருக் கானிடம், தளபதி விஜய் குறித்து ஒரு வார்த்தையில் சொல்லுங்கள் என கேட்டார். அதற்கு பதிலளித்த ஷாருக் கான், அவ்ஸம் என ஒற்றை வார்த்தையில் அட்டகாசமாக தெரிவித்தார்.

ஷாரூக் கானின் பதிலால் விஜய், அஜித் மற்றும் தனுஷின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தங்களின் தலைவர்கள் குறித்த கேள்விக்கு பாலிவுட் கிங் அளித்த பதிலை ரசிகர்கள் தங்களின் டிவிட்டர் பக்கத்தில் ரீடிவிட் செய்து வருகின்றனர்.

இதனிடையே உங்களுக்கு பிடித்த பிரேக் ஃபாஸ்ட் என்ன என்று ரசிகர்கள் கேட்டதற்கு பிளாக் காஃபி என தெரிவித்திருக்கிறார் ஷாரூக் கான்.