விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் கவின். இவருக்கு ரசிகர்கள் ஆதரவு அதிகம் கிடைத்தாலும் அவர் கடைசி நேரத்தில் ஐந்து லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார்.

மேலும் கவினின் அம்மா மற்றும் பாட்டி உள்ளிட்டவர்கள் சீட்டு மோசடி வழக்கில் 7 வருடம் சிறை தண்டனை பெற்றுள்ளனர். அந்த செய்தி கவினின் பெயரை பெரிய அளவில் டேமேஜ் செய்தது.

இந்நிலையில் தற்போது கவின் தன்னுடைய அம்மா மற்றும் பாட்டி ஆகியோருடன் வீட்டில் இருக்கும் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.