பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகம் ரசிகர்களை ஈர்த்தவர் தர்ஷன். அவர் பிக்பாஸ் 3 பைனலுக்கு ஒரு வாரம் முன்பு ஷோவில் இருந்து வெளியேற்றப்பட்டார். அது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

மேலும் தர்ஷனுக்கு பட வாய்ப்பு தருவதாக பிக்பாஸ் பைனல் மேடையில் நடிகர் கமல் அறிவித்தார்.

இந்நிலையில் தர்ஷன் பிகில் படத்தின் வெறித்தனம் பாடலுக்கு நடனம் ஆடி அதை விடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். அதற்கு 10 மணி நேரத்தில் 2 லட்சத்திற்கும் மேல் லைக்குகள் குவிந்துள்ளது.