உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தின் அருகில் உள்ள ரியானவ் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தான் ஜெய்சிங் யாதவ்.

இவர் தற்போது தாய்லாந்தில் வேலை செய்து வருகிறார். இவர் மனைவி தான் கீதா. தாய்லாந்தில் இருக்கும் தனது கணவருடன் அடிக்கடி மெய் மறந்து தனது செல் போனில் பேசுவது எப்போதுமே வழக்கம்.

இருவரும் நாள்தோறும் மணிகணக்காய் பேசுவது அக்கம் பக்கத்தினரையே முகம் சுளிக்கும் அளவு இருந்து என்றால் பார்த்து கொள்ளுங்கள். இப்படி தான் எப்போதும் பேசுவது போல் பேச்சு சுவாரஸ்யத்தில், அப்படியே தனது வீட்டில் இருந்த படுக்கையறைக்குச் கீதா சென்றுள்ளார். அப்போது அவர்களது பெட்ரூம் பெட்டில், இரண்டு பாம்புகள் பின்னபடி விளையாடிபடி கிடந்தன.

மெத்தையில்இருந்த இரட்டை பாம்புகள்?
இதை சற்றும் எதிர்பார்க்காத கீதா தான் எப்போதும் மெத்தையில் அமர்வது போல் அமர்ந்தார் ஆனால் அங்கு தான் அவருக்கு அதிர்ச்சி காத்து இருந்தது அவரது மெத்தையில் ஏற்கனவே 2 பாம்புகள் தேனிலவு கொண்டாடி கொண்டு இருப்பதை கவனிக்கவில்லை.

கணவருடன் மெய்மறந்து பேசியபடியே, அந்த பாம்புகளின் மீது நறுக்கு என்று அப்படியே அமர்ந்துவிட்டார். இதையடுத்து தனது தேனிலவில் இடையூறு செய்த கீதாவை ஆவேசம் கொண்ட அந்தப் பாம்புகள் அவரைக் மாத்தி மாத்தி கொத்தின.

உடனடியாக சம்பவ இடத்திலேயே மயங்கிய அவரை, வீட்டில் உள்ளவர்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அவசர அவசரமாக தூக்கிச் சென்றனர். ஆனால், எந்த பலனும் இல்லை அதற்குள் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்க அவரது உறவினர்கள் ஆழ்ந்த சோகத்தில் அவரது உறவினர்கள் உள்ளனர்.

இதன் பின்னர் வீட்டுக்கு வந்த அவரது உறவினர்கள் அப்போதும் அந்த பாம்புகள் அங்கேயே இருந்ததால் அந்த இரண்டு பாம்புகளையும் அடித்து அங்கேயே கொன்று தங்கள் பழியை தீர்த்தனர்.