கடந்த வாரம் நமது அருள் தரும் ஆன்மீக குரு பெயர்ச்சி பலனை காணொளியாக கண்ட வாசகர் ஒருவர் தனக்கு விருச்சிக ராசி என்றும் விருச்சிக ராசிக்கு இனிமேல் பொற்காலம் எனவும் நீங்கள் யூடிப் காணொளியில் கூறி இருந்தீர்கள். மிகவும் சந்தோஷமாக உள்ளது. ஆனால் நடைமுறையில் அதற்கான அறிகுறியே என் வாழ்வில் தென்படவில்லை எனக்கூறினார்.

அவரது வயது என்னவென்று கேட்டேன் தெரியாது எனக் கூறினார். பிறந்த நாள் ஆவது தெரியாமல் எந்த அடிப்படையில் விருச்சிகராசி எனக் கூறுகிறீர்கள் எனக் கேட்டேன்.

காரணம்ஜோதிடத்தில் நட்சத்திரத்தின் அடிப்படையை வைத்து ராசி கணக்கிடப்படுகிறது.
நட்சத்திர பாதத்தின் அடிப்படையில் தசாபுத்தி நிர்ணயிக்கப்படுகிறது.

எந்தவித அடிப்படை ஆதாரமும் இன்றி இவ்வாறு பெயரை வைத்து ராசியை குறிக்கின்றனர் என புரியவில்லை.இதனால் ஜோதிடத்திற்கும் ,ஜோதிடருக்கும் மிகப்பெரிய களங்கம் உண்டாகிறது.

அதுமட்டுமல்லாமல் இது மிகப்பெரிய பாவச் செயல்.

பெயரை வைத்து ராசியை சொல்ல முடியும் என்பதை அப்போதுதான் முதல்முறையாக கேள்விப்பட்டேன்.

என்ன கொடுமை சரவணா என எண்ணத் தோன்றியது.

சில நேரங்களில் இதுபோன்று கேள்விப்படும்போது நமது ஜோதிடக் கலையின் மதிப்பை சிலர் தவறாக பயன்படுத்துவதை நினைத்து மனம் வருந்துகிறது சில நேரங்களில் பெயர் பொருத்தத்தை வைத்து ஜாதகம் பார்த்து கொடுங்கள் என பலரும் கேட்கின்றனர்.

கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த ஜாதகத்தை நான் தொடுவதே இல்லை.

கடவுளிடம் பூக்கட்டி, அவர் இடமே உத்தரவு கேட்டு ,மனத்திற்குப் பிடித்திருந்தால் தாராளமாக செய்து கொள்ளுங்கள் எனக்கூறி அவர்களை அனுப்பி விடுவேன்.