பலரும் எதிர்பார்த்தது போலவே நேற்றைய பிக்பாஸ் 3 பைனலில் முகின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு தற்போது பாராட்டுகள் குவிந்துவருகிறது.

இந்நிலையில் டைட்டில் ஜெயித்தபிறகு முகின் செய்த ஒரு விஷயம் ரசிகர்களை நெகிழ்ச்சியாக்கியுள்ளது.

சாண்டி கவினை மேடைக்கு அழைத்து பிக்பாஸ் வின்னர் மெடலை கமல் மூலமாக போட செய்தார். மேலும் முகின் தர்ஷனை மேடைக்கு அழைத்து மெடலை கொடுத்தார். “தர்ஷன் ரொம்ப ஆசைப்பட்டான்..” என கூறி தர்ஷனுக்கும் இந்த வெற்றியை சமர்ப்பித்தார்.

இவர்களது நட்பை பார்த்து கமல்ஹாசன் வியந்து நின்றார்.