ஆயுதபூஜை கொண்டாட பணம் வரும் ATM இயந்திரத்தை தண்ணீர் ஊற்றி கழுவிய நகைச்சுவையான சம்பவம் இன்று திருப்பூரில் நடைபெற்றுள்ளது.

வருடம் தோறும் ஒரு முறை குழந்தைகளின் குட்டி சைக்கிள் முதல் பெரியவர்கள் பயன்படுத்தும் மிகப்பெரிய கார், பைக், லாரி என கனரக வாகனங்கள் வரை மனிதனின் வாழ்வில் உயர்வுக்கு உதவும் பொருட்களுக்கு மஞ்சள், குங்குமமிட்டு, பெரிய மாலை அணிவித்து அன்றைய நாளில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டு வருவது நமது தொன்று தொட்ட வழக்கம்.

நாம் வேலை செய்யும் தொழிற்கூடங்களிலும், நமது அலுவலகங்களிலும் ஆயுதபூஜை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், திருப்பூரில் உள்ள பிரபல வங்கியின் ATM இயந்திரத்தை தண்ணீர் ஊற்றி கழுவிய நகைச்சுவையான சம்பவம் ஒன்று அங்கு தற்போது அரங்கேறியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர் – பெருந்துறை சாலையில் அமைந்துள்ள பிரபல தனியார் வங்கி ATM மையத்தில் பணியாற்றி வந்த காவலாளி ஒருவர் ஆயுதபூஜையை முன்னிட்டு ATM மையத்தை தண்ணீர் ஊற்றி கழுவி துடைத்துள்ளார்.