அசுரன் படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக உருவெடுத்துள்ளது. தனுஷுக்கு மிக சிறந்த முதல்வார கலெக்சனை இந்த படம் பெற்றுக் கொடுத்துள்ளது.
சென்னை: அசுரன் படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக உருவெடுத்துள்ளது. தனுஷுக்கு மிக சிறந்த முதல்வார கலெக்சனை இந்த படம் பெற்றுக் கொடுத்துள்ளது.

அசுரன் படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம்தான் அசுரன்.

இந்த நாவலின் கதையில் சில மாற்றங்களை செய்து, வெற்றிமாறன் இதை திரைக்கு கொண்டு வந்து இருக்கிறார். இதன் திரைக்கதையில் மட்டும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.இந்த படம் முதல் நாளில் இருந்து நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. படத்தின் காட்சிகள் எல்லாமே நன்றாக இருக்கிறது. தேசிய விருது மட்டுமல்ல ஆஸ்காருக்கும் தகுதியான படம் இது என்று விமர்சனம் வைத்து வருகிறார்கள்.

இந்த படத்திற்கு பெரிதாக விளம்பரம் கிடையாது. இதனால் படம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை சரியாக வசூல் பெறவில்லை. ஆனால் வெள்ளிக்கிழமை விமர்சனத்திற்கு பிறகு படம் பெரிய வரவேற்பை பெற்றது.

அதன்பின்தான் அசுரன் பார்க்க வேண்டும் என்று எல்லோரும் தியேட்டர் நோக்கி செல்ல தொடங்கினார்கள். வரிசையாக தியேட்டர்கள் அதிகப்படுத்தப்பட்டது. அசுரன் படம் நன்றாக இருந்ததால் சில தியேட்டர்களில் கூடுதல் காட்சிகள் போடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது முதல் 6 நாட்கள் வசூல் விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி வெளிநாட்டில் அசுரன் படம் 32 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் 20 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. மற்ற மாநிலங்களில் 6 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

இந்த வார இறுதியில் படம் எப்படியும் 100 கோடியை நெருங்கிவிடும். அடுத்த திங்கள் கிழமை 100 கோடியை தொட்டுவிடும் என்று கூறுகிறார்கள். படத்தின் பட்ஜெட் 30 கோடிக்கும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால் இந்த படம் பிளாக்பஸ்டர் படமாக உருவெடுத்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தனுஷுக்கு இதுதான் சிறந்த முதல் வார கலெக்சன் என்று கூறுகிறார்கள்.