பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகர் கவின். அவருக்கு கவின் ஆர்மி என பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

பிக்பாஸ் ஃபைனல் நிகழ்ச்சியின் அவருக்கு Game changer என்ற விருது கொடுக்கப்பட்டது. அதன் அவர் தன் மனநிலை குறித்து செய்தியாக வெளியிட்டுள்ளார்.

இதில் அவர் நான் ஏன் இந்த நிகழ்ச்சிக்கு சென்றேன் என்பதை புரியவைக்க விரும்புகிறேன். இந்த வாய்ப்பை என்னுடைய மறுபிரவேசமாக நினைத்தேன். கடந்த இருவருடங்களில் நான் நிறைய இழந்துவிட்டேன்.

நான் நேர்மறையான மனநிலையுடன் சென்றேன் என்னால் இயன்றவரை அதை காட்டினேன். வேறு எதையும் நான் எதிர்பார்க்கவில்லை. நான் எதிர்பார்த்தது பணம் மற்றும் கொஞ்சம் புகழ். என் வாழ்க்கையில் நடந்த சில பிரச்சனைகளால் என்னால் முழுமையாக இந்த நிகழ்ச்சியில் மனதை செலுத்த முடியவில்லை. மகிழ்ச்சையை முழுமையாக கொண்டாட முடியவில்லை.

எல்லாம் இருந்தபோதிலும் நான் இந்த நிகழ்ச்சியை பற்றி புரிந்துகொள்ள விரும்பினேன். நான் இதுகுறித்து தெரிந்து வைத்திருந்தாலும் இந்நிகழ்ச்சியை புரிந்துகொள்ள எனக்கு நேரம் எடுத்துக்கொண்டது. என்னுடைய உணர்வுகளுக்கு நான் நேர்மையாக இருக்கிறேன், என்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளேன்.

உங்கள் அன்பும் ஆதரவும் எனக்கு என் குடும்பத்திற்கும் எப்போதும் தேவை என கூறியுள்ளார்.