முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தர்பார் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவர் சம்பந்தமான காட்சிகள் அனைத்தும் எடுத்து முடிக்கப்பட்டு தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பை நெருங்கியுள்ளது.

தொடர் தோல்விகளை சந்தித்து வந்த முருகதாஸுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியின் திரைப்படத்தின் மூலமாக மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமையும் என தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு நயன்தாரா இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்திருந்தது அந்த போஸ்டர் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் கவர்ந்திருந்தது.

அடுத்ததாக தர்பார் திரைப்படத்தின் டீசருக்கு ஆக உலகம் முழுவதிலுமுள்ள சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர் அப்படி காத்திருக்கும் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து விரைவில் வரவிருக்கிறது என்கிற தகவல் வெளிவந்துள்ளது.

தீபாவளி தினத்தன்று சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்பார் திரைப்படத்தின் டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.தீபாவளியன்று இந்த திரைப்படத்தின் டீசர் வெளிவந்தால் இந்த டீசரை காணவே ஒரு பெரிய கூட்டம் திரையரங்கை நோக்கி படை எடுக்கும் என்பதில் ஐயமில்லை.