பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் மக்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கெல்லாம் முக்கிய காரணம் ஓவியா தான் என்றால் மிகையல்ல.

இதை தொடர்ந்து இரண்டாவது சீசன் கொஞ்சம் டல் ஆனது, ஆனால், மூன்றாவது சீசன் தற்போது செம்ம ரீச் ஆகிவிட்டது.

இந்நிலையில் நாளை பிக்பாஸ் வின்னர் யார் என்பதன் அறிவிப்பு வரும் என்று மக்கள் அனைவரும் நிகழ்ச்சியை பார்க்க ஆவலுடன் இருக்கின்றனர்.

ஆனால், பிரபல தயாரிப்பாளர் மற்றும் சினிமா பிரபலம், ஜே.எஸ்.கே.கோபி தன் டுவிட்டர் பக்கத்தில் முகென் தான் வின்னர் என அறிவித்துவிட்டார்.

இதை ரசிகர்கள் தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர், இதோ…

பிக்பாஸ் சீசன் 3ன் வெற்றியாளர் யார் என்பது தொடர்பான நிறைய கணிப்புகள் மற்றும் விவரங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், முகேன் தான் வெற்றியாளர் என்ற தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. இது குறித்த புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்து விட்டார். இது எந்த அளவு உண்மை தன்மையான தகவல் என்பது தெரிய வில்லை.

இதேவேளை, முகேன் வெற்றி பெற வேண்டும் என்பது ஈழத்து தர்ஷனின் ஆசையும் கூட.

மேலும், நேற்றே பிக் பாஸ் இறுதி நாள் நிகழ்ச்சியில் போட்டியில் இருந்து வெளியேறிய தர்ஷன், மேகன் வைத்தியா மற்றும் சாக்க்ஷி ஆகியோர் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.