வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அசுரன் திரைப்படம் தற்போது வெளிவந்திருக்கிறது தனுஷின் நடிப்பு இதில் பரவலாக பாராட்டப்பட்ட போதிலும் அதைவிட அதிகமாக இந்த திரைப்படத்தின் இசை பாராட்டப்பட்டு வருகிறது ஜிவி பிரகாஷ் நடிகராக மாறி அதற்கு பதிலாக அவர் இன்னும் அதிகமான படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றலாம் என தமிழ் சினிமா ரசிகர்கள் பலர் பரவலாக பேசிக்கொள்கின்றனர்.

தனுஷ் வெற்றிமாறன் திரைப்படங்கள் எப்போதுமே மிக அழுத்தமான கதையை கூறி தனுஷின் நடிப்பாற்றலை வெளிக்கொண்டுவரும் அதேபோலத்தான் இந்த திரைப்படமும் அமைந்திருக்கிறது என விமர்சகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.ஆனால் இந்தத் திரைப்படம் வெளிவந்த அன்றே மிகப் பெரிய சோதனையை சந்தித்தது என்பது தான் வேதனை.

ஆம் இந்த திரைப்படம் வெளிவந்து ஒரு சில காட்சிகள் மட்டுமே திரையரங்குகளில் ஓடிய நிலையில் தமிழ் ராக்கர்ஸ்சில் இந்த திரைப்படம் வெளிவந்து இருக்கிறது.

அதுவும் பல்லாயிரம் பேர் அதனை அந்த இணையதளம் வாயிலாகவே கண்டுபிடித்திருக்கின்றனர். பல ஆண்டுகள் ஆனாலும் பல சங்கங்களுக்கு தலைவர்கள் ஒன்று சேர்ந்தாலும் இந்த தமிழ் ராக்கர்ஸ் ஐ ஒன்றுமே செய்ய முடியாது என தமிழ்ராக்கஸ் ரசிகர்கள் கேலி செய்கின்றனர்.