நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் பிரபல நடிகை சமந்தா .இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார், திருமணத்திற்கு பிறகு பல நடிகைகள் காணாமல் போய்விடுவார்கள் சினிமாவிலிருந்து ஆனால் சமந்தாவிற்கு திருமணத்திற்கு பிறகு பல பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கின்றன.

இவர் இறுதியாக இவர் நடிப்பில் வெளியான சீமராஜா போன்ற திரைப்படங்கள் இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை. அதேபோல் சூப்பர்டீலக்ஸ் ,மஜூலி போன்ற திரைப்படங்களும் இவருக்கு சுமாரான வரவேற்பை தான் இவருக்கு கொடுத்தது.சமீபகாலமாக இவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், நடிகை சமந்தா சமீப காலமாக தீவிர உடற்பயிற்சி செய்து வருகிறார் மேலும் அடிக்கடி புகைப்படங்களையும் இவர் வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விழாவில் கலந்துகொண்ட நடிகை சமந்தா புடவையில் மிகுந்த பேரழகுடன் காணப்பட்டார். தற்போது இணையதளங்களை அதிகமாக பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது மேலும் இவரது ரசிகர்கள் இந்த புகைப்படங்களை வைரலாக பரப்பி வருகின்றனர்.