தர்ஷன் பிக்பாஸ் வீட்டில் எல்லோருக்கும் பிடித்த போட்டியாளர். இவர் தான் இந்த வருட பிக்பாஸ் வின்னர் என்று அனைவருமே நினைத்தனர்.

ஆனால், யாரும் எதிர்ப்பாரத விதமான தர்ஷனை போட்டியிலிருந்து எலிமினேட் செய்தனர், அவரை ஏன் எலிமினேட் செய்தார்கள் என்று பலருக்கு அதிர்ச்சி தான்.

இந்நிலையில் தர்ஷன் தற்போது மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார், அவரை பார்த்ததும் எல்லோருக்கும் சந்தோஷம் தான்.

அதே நேரத்தில் வனிதா, ஷெரினிடம் தர்ஷன் எலிமினேட் ஆக நீ தான் காரணம் என்று கூறினார், இதை கேட்டு ஷெரின் அழுத்துக்கொண்டே தான் இருந்தார்.

தற்போது வீட்டிற்குள் வந்த தர்ஷன் முதல் வேலையாக பிக்பாஸ் வீட்டிலிருந்து நான் எலிமினேட் ஆக நீ காரணம் இல்லை, யார் சொல்வதையும் நம்பாதே என பதிலடி கொடுத்தார்.