பிக்பாஸ் சீசன் 3ன் வெற்றியாளர் யார் என்பது தொடர்பான நிறைய கணிப்புகள் மற்றும் விவரங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 3 தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. இதுதான் கடைசி வாரம் என்பதால் இப்போதே மக்கள் பெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் யார் என்பது தொடர்பாக கடுமையான விவாதம் நடந்து வருகிறது. இந்த வருடம் பிக்பாஸ் சீசன் 3 வின்னர் மகுடத்தை சூட போவது யார் என்று எல்லோரும் எதிர்பார்க்க தொடங்கி உள்ளனர்.

பிக்பாஸ் வீட்டிலும் கஸ்தூரியிடம் மல்லுக்கட்டி அசிங்கப்படுத்திய வனிதா.. ப்பா.. என்னா பேச்சு!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் தற்போது சாண்டி, முகேன் ராவ், லாஸ்லியா, ஷெரீன் ஆகியோர் இருக்கிறார்கள். இவர்கள் நான்கு பேரில் ஒருவர்தான் போட்டியில் பரிசை தட்டி செல்ல போகிறார். இவர்கள் நான்கு பேருக்கும் இடையில் இதனால் தற்போது கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இந்த போட்டியில் இருக்கும் இரண்டு பெண்கள் லாஸ்லியா, ஷெரீன். இவர்கள் இருவருக்கும் தனியாக பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதிலும் லாஸ்லியா பெரிய அளவில் ரசிகர்களை சம்பாதித்துள்ளார். ஆனால் போக போக இவர் கெட்ட பெயர் எடுத்து கொஞ்சம் ரசிகர்களை இழந்தார்.

அதே சமயம் ஷெரீன் தன்னுடைய நல்ல குணம் காரணமாக இணையம் முழுக்க நல்ல பெயர் பெற்றார். மிகவும் நன்றாக விளையாடுகிறார். அன்பாக இருக்கிறார் என்று ஷெரீன் மீது நிறைய நல்ல பெயர் உள்ளது. ஆனால் தர்ஷன் வெளியேற்றத்திற்கு ஷெரீன் ஒருவகையில் காரணம் என்ற சர்ச்சை இன்னொருபுறம் நிலவி வருகிறது.

அதேபோல் சாண்டி எந்த விதமான சண்டை சச்சரவும் இல்லாமல் மிகவும் திறமையாக இந்த போட்டியில் விளையாடி இருக்கிறார். இவர் பெரிதாக சர்ச்சை எதிலும் சிக்கவில்லை. நிறைய காமெடி செய்து சந்தோசமாக விளையாடி உள்ளார். ஆனால் இவருக்கு பெரிய அளவில் மற்றவர்கள் போல ரசிகர்கள் இல்லை.

இந்த நான்கு போட்டியாளர்களில் தற்போது முன்னிலையில் இருப்பது முகேன் ராவ் என்கிறார்கள். இவருக்குத்தான் தற்போது பெரிய அளவில் ரசிகர் படை இருக்கிறது. அதேபோல் இவருக்கு பெரிதாக கெட்ட பெயர் கிடையாது. பெண் ரசிகர்கள் அதிகம் உள்ளனர்.

ஆகவே பெரும்பாலும் முகேன் ராவ்தான் இந்த முறை வெற்றிபெற வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இணையம் முழுக்க இது தொடர்பாக பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். முகேன் ராவ் உண்மையில் இந்த முறை பிக்பாஸ் சீசன் 3 டைட்டிலை தட்டிச் செல்கிறாரா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.