சிவகார்த்திகேயனின் ஒவ்வொரு படத்திற்கும் ஒரு விதமான பிரச்சனை தொடர்ந்து வந்து கொண்டேதான் இருக்கிறது. தற்போது அவர் நடித்து கொண்டிருக்கும் ஹீரோ படத்தில் வேறுவிதமான பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் ஹீரோ. இப்படத்தை K.J.R ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கிறது. இதில் சிவாவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் அர்ஜுன் இவானா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் தொடங்கிய நிலையில் செப்டம்பர் மாதம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படகுழு வெளியிட்ட து. இந்த படத்திற்கு ஹீரோ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை டிசம்பர் 20ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்திற்கு ஒரு புதுவிதமான சிக்கல் எழுந்துள்ளது.

இந்த நிலையில் ஆனந்த் அண்ணாமலை இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்திற்கும் இதே தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. விஜய் தேவரகொண்டா பட தயாரிப்பு நிறுவனம் அவர் ஹீரோ படத்தின் தலைப்பு தங்களுக்கு சொந்தமானது என்று கூறி கே ஜே ஆர் ஸ்டூடியோ நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது தலைப்பை பயன்படுத்த கூடாது என்று ஏப்ரல் மாதமே உத்தரவிட்டார். ஆனால் தொடர்ந்து அந்த தலைப்பை சிவகார்த்திகேயன் படகுழு பயன்படுத்தி வருகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக தோல்வி படங்களை கொடுத்து வந்த சிவகார்த்திகேயன் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நம்ம வீட்டு பிள்ளை படம் மூலம் சந்தோசத்தில் இருந்தாா். அதை கெடுக்கும் வகையில் மீண்டும் ஹீரோ பட தலைப்பு பிரச்சனை தலைதூக்கி இருக்கிறது என்று சிவகார்த்திகேயன் மற்றும் அவரது ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர்.