பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கின்றது. 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில் தற்போது 4 பேர் மட்டுமே விளையாடி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி இந்த வாரத்துடன் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய உள்ளது. இந்நிலையில் யார் அந்த பட்டத்தை வெல்லப் போகிறார் என்று ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் இரண்டு நாட்களாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்களை திரும்பவும் வீட்டிற்குள் அனுப்பி வருகிறது. நேற்று மீரா மிதுன், பாத்திமா பாபு, மோகன் வைத்யா, ரேஷ்மா ஆகியோர் உள்ளே சென்று வந்தனர்

இந்நிலையில் நேற்றைய எபிசோடின் இறுதியில் லாஸ்லியா கவின் நினைவில் இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக அவருடைய T.Shirt ஐ அணிந்திருந்தார். அதனை தற்போது நெட்டிசன்கள் தீயாய் பரப்பி வருகின்றனர்.