சேரன் பல தரமான படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர். இவர் இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் தேசிய விருது வென்றுள்ளது.

இந்நிலையில் சேரன் தற்போது பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த கதை எல்லாம் அனைவரும் அறிந்ததே.

அதை தொடர்ந்து சேரன் என்ன சொல்வார், எப்போது பேட்டி தருவார் என பலரும் காத்திருந்தனர். அந்த வகையில் தற்போது அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு சில கருத்தை மக்களுக்கு நன்றி சொல்லி தெரிவித்துள்ளார்.

இதில் ‘தலைவணங்கி நிற்கிறேன்.. எனது 91நாட்கள் பிக்பாஸ் பயணத்தை சரியாக புரிந்துகொண்டு என்னை தாலாட்டி தட்டிக்கொடுத்து என் அன்பின்பக்கம் நின்ற நல்இதயங்களுக்கும் நன்றி..

நேர்மை,நற்பண்பு,உண்மையின் பக்கம் நிற்கும் நீங்களே தலைசிறந்த மனிதர்கள். மீண்டும் என்னை உங்களில் ஒருவனாக ஏற்றதில் மகிழ்ச்சி’ என்று டுவிட் செய்துள்ளார்.

இந்த டுவிட்டிற்கு மக்களிடையே பெரும் ஆதரவு சேரனுக்கு கிடைத்து வருகின்றது.