வெள்ளித் திரையில் வாய்ப்புகள் இல்லாததால் செந்தில் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் காமெடிக்கென வலம் வந்த சிலரை எப்போதும் மறக்க முடியாது. கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் என பெயர்களை அடுக்கி கொண்டே செல்லலாம்.

அதிலும் கவுண்டமணி செந்தில் காமினேஷன் இன்று வரை மக்களுக்கு சலிப்பு தட்டாத கூட்டணி. ஆனால் இவர்கள் இருவருக்குமே இப்பொழுது சினிமாவில் வாய்ப்பில்லை.

கவுண்டமணி அவர்கள் உடல்நல குறைவால் வீட்டிலேயே இருந்து வருகிறார். செந்திலுக்கு தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பிறகு மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையால் அவர் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள ராசாத்தி என்ற சீரியலில் தான் அவர் நடிக்கிறார்.

இந்த சீரியலில் அவர் மட்டுமில்லை விஜயகுமார், விசித்திரா என பல வெள்ளித்திரை நட்சத்திரங்களும் நடிக்கின்றன.