பிக்பாஸ் வீட்டில் நிகழ்ச்சி ஆரம்பித்த தினத்திலிருந்தே பல பிரச்சனைகள் சர்ச்சைகள் விமர்சனங்கள் எழுந்துகொண்டு தான் இருக்கின்றன.

இந்நிலையில், 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 8 போட்டியாளர்களே உள்ளனர்.

இவர்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு தான் மக்கள் மத்தியில் அதிகளவில் உள்ளது.

இந்நிலையில், கவின் லொஸ்லியாவின் மீதான காதலால் அனைவரிடத்திலும் சண்டையிட்டு வருகிறார்.

இன்றைய ப்ரோமோ வீடியோவில், கூட டிக்கெட் ஃபினாலே டாஸ்கின் போது சாண்டி எதிர்பாராத விதமாக லொஸ்லியாவை கீழே தள்ளிவிட்டுவிட்டார்.

இதனால், ஆத்திரமடைந்த கவின், சாண்டியை கடுமையாக திட்டுகிறார். லாஸ்லியாவிற்காக கவின் இப்படி சாண்டியிடம் மல்லு கட்டுவது முதல் முறை அல்ல.

இந்நிலையில், கவின் நண்பர் ஒரு பேட்டியில் அவர் குறித்து பேசியது தற்போது சமூக வலைதளங்களில் அதிகளவில் வைரலாகி வருகிறது.