தமிழில் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக முன்னணி நடிகர் ஒருவரிடம் நிகழ்ச்சி நிர்வாகிகள் அணுகி உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
சென்னை: தமிழில் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக முன்னணி நடிகர் ஒருவரிடம் நிகழ்ச்சி நிர்வாகிகள் அணுகி உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி உலகத்தில் பல நாடுகளில் ஒளிபரப்பாகி வருகிறது. சில நாடுகளில் இந்த நிகழ்ச்சி வெவ்வேறு பெயர்களில் ஒளிபரப்பாகி வருகிறது.

அதேபோல் தமிழகத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி பெரிய வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டு இருக்கிறது. மூன்றாவது சீசன் தற்போது மிகவும் பெரிய அளவில் வரவேற்பை பெற்று, டிஆர்பியும் எகிறி உள்ளது.

இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். தெலுங்கில் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியை மூன்று பேர் மாற்றி மாற்றி தொகுத்து வழங்கிவிட்டனர். தமிழில் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

அதன்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நடிகர் கமல்ஹாசன் எப்போது வேண்டுமானாலும் விலகலாம் என்று கூறுகிறார்கள். கமல்ஹாசன் தற்போது தீவிர அரசியலில் ஈடுப்பட்டு வருகிறார். மக்கள் நீதி மய்யம் கட்சி வருகிற சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளது.

இதனால் கமல்ஹாசன் கொஞ்சம் கொஞ்சமாக பொது வாழ்க்கையில் பிசி ஆகி வருகிறார். பெரும்பாலும் கமல்ஹாசன் அடுத்த பிக்பாஸ் 4 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டார் என்று கூறுகிறார்கள். இதற்காக கமல்ஹாசனுக்கு பதிலாக வேறு யாரையாவது நிகழ்ச்சிக்கு அழைக்க நிகழ்ச்சி நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர் என்கிறார்கள்.

இதற்காக நிகழ்ச்சி நிர்வாகிகள் முன்னணி நடிகர் ஒருவரிடம் பேசி உள்ளனர். ஆனால் அந்த நடிகர், என்னால் தொகுத்து வழங்க முடியாது என்று கூறிவிட்டாராம். நான் தொகுத்து வழங்கினால் சரியாக இருக்காது. யாரும் நிகழ்ச்சியை விரும்ப மாட்டார்கள்.

அதேபோல் எனக்கு நிறைய படங்கள் நடிக்க வேண்டிய வேலை இருக்கிறது. என்னால் இப்போது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க முடியாது என்று கூறிவிட்டாராம். இதனால் வேறு ஒருவரை நிகழ்ச்சி நிர்வாகிகள் அணுகுவதற்கு முடிவு செய்துள்ளனர்.