சுபஸ்ரீ இறந்து கிடக்கும் போது, அங்கு வீடியோ, செல்பி எல்லாம் எடுத்தாங்க, இதை எல்லாம் எப்படி சொல்றது என்று பெண்ணின் பெற்றோர் கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.

தமிழகத்தின் சென்னை குரோம்பேட்டை நெமிலிச்சேரி பவானி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது ஒரே மகள் சுபஸ்ரீ (23). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், பெருங்குடி கந்தன்சாவடியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இவர் பல்லாவரம் ரேடியல் சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந் போது, சாலையில் நடுவில் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலரான மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ஜெயகோபால் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த பேனர் காற்றில் சரிந்து சாலையில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ மீது விழுந்தது.

இதில் நிலைதடுமாறிய அவர் இருசக்கர வாகனத்துடன் சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த லாரி அவர் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதால், கட்சியினர் இனிம்லே தங்கள் நிகழ்ச்சிகளிலோ, கூட்டங்களிலோ இனி பேனர் வைக்க கூடாது என்று முடிவு செய்தனர். அதுமட்டுமின்றி திரைப்பிரபலங்கள் பலரும் ரசிகர்கள் யாரும் பேனர் வைக்க வேண்டாம் என்று அறிவிப்பு வெளியிட்டனர்.

இந்நிலையில் சுபஸ்ரீயை பறி கொடுத்த அவரின் தாய் மற்றும் தந்தை செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள், எங்களைப் போன்று யாரும் பிள்ளைகளை இழந்து தவிக்க வேண்டாம்.

பேனர் இல்லை என்றால் இப்போது என் மகள் எங்களுடன் இருந்திருப்பாலே என்ற எண்ணம் அடிக்கடி தோன்றுகிறது, அன்றைய தினம் ஆம்புலனஸ் உரிய நேரத்தில் வரவில்லை, அப்போது காப்பாற்ற உதவ வந்த மக்களில் சில பேர் வீடியோ, செல்பி எடுக்கின்றனர்.

இதெல்லாம் எப்படி முடிகிறது, என் மகள் சாவிற்கு காரணமான(பேனர் வைத்த. அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலரான மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ஜெயகோபால் ) -வுக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும்.

அதை விடுத்து தேவையில்லாதவர்களை கைது செய்வது, பேனர் அடித்த கடைகளுக்கு சீல் வைப்பது எல்லாம் சரியாகாது, இனிமேல் பேனரை நான் நடுரோட்டில் பார்த்தால், நானே பிளேடால் கிழிப்பேன் என்று அவருடைய தாய் மிகுந்த வேதனையுடன் கூறியுள்ளார்.