பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வனிதா தான் வெளியேறப் போகிறார் எனக் கூறப்படுகிறது.
சென்னை: இந்த வாரம் பதிவாகியுள்ள வாக்குகளின் அடிப்படையில் வனிதா தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார் எனத் தெரிகிறது.

வனிதா விஜயகுமார் என்ற பெயரே மாறி பிக் பாஸ் வனிதா என மாறும் அளவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியோடு ஒன்றி விட்டார் வனிதா. ஆரம்பத்தில் இருந்தே அவர் வீட்டுக்குள் இருந்தால் பிக் பாஸுக்கு கண்டெண்ட் பயமே இருக்காது. சின்ன சின்ன பிரச்சினையைக் கூட ஊதி ஊதி பெரிதாக்கி விடுவார்.

இதனாலேயே பிக் பாஸ் வீட்டில் மட்டுமல்ல, சமூகவலைதளங்களிலும் வனிதாவிற்கு வத்திக்குச்சி, சண்டைக்கோழி, வாத்து, வாயாடி என பல பெயர்கள் உள்ளன.

“ஆமாம், அந்த இயக்குநரைத்தான் காதலிக்கிறேன்”.. முதன்முறையாக ஒப்புக் கொண்ட ரஜினி ஹீரோயின்

மூன்றாவது வாரமே பிக் பாஸ் வீட்டில் இருந்து குறைந்த வாக்குகளைப் பெற்று வெளியேற்றப்பட்டார் வனிதா. ஆனால், அடுத்த சில வாரங்களிலேயே மீண்டும் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்துவிட்டார். முதலில் சிறப்பு விருந்தினராக கூறப்பட்டவர், பின்னர் வைல்ட் கார்டு எண்ட்ரியாக அறிவிக்கப்பட்டார்.

வந்த முதல் வாரமே மது, அபி என இரண்டு போட்டியாளர்களை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார். அந்தளவுக்கு சாதுர்யமாக விளையாடி வருகிறார். கடந்த வாரம் வரை பிக் பாஸ் வீட்டில் நடந்த பெரும்பாலான பிரச்சினைகளுக்கு அவர்தான் பின்னணியில் காரணமாக இருந்தார்.

கடந்த வாரம் கூட, தர்ஷனைக் காதலிப்பதாகக் கூறி ஷெரினை கதறிக் கதறி அழ வைத்தார். அவருக்கு கூட்டாளியாக சாக்‌ஷியும் வந்துவிட, இருவரும் சேர்ந்து சாமர்த்தியமாக விளையாடி ஷெரினை எவிக்சனில் இருந்து காப்பாற்றினார்கள். அந்தவாரம் கவின் தான் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், எதிர்பாராத விதமாக கடந்த வாரம் சேரன் எவிக்ட் ஆனார். ஆனால் அவரை சீக்ரெட் ரூமுக்கு அனுப்பிய பிக் பாஸ், தற்போது மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி விட்டார். சேரனின் வெளியேற்றத்தால் மனமுடைந்த வனிதா, சோகத்தில் கதறி கதறி அழுதார். அப்போதே அடுத்த வாரம் தன்னைத்தான் வெளியில் அனுப்ப வேண்டுமென பிக் பாஸிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.

அதற்குத் தகுந்தாற்போல் இந்த வாரம் ரொம்பவே அடக்கி வாசித்து வருகிறார் வனிதா. ப்ரீஸ் டாஸ்க்கில் பல்வேறு பிரச்சினைகள் நடந்த போதும், அமைதியாகவே இருந்து வருகிறார் வனிதா. இதனால் வெளியில் போகும் வாரம் மக்களிடையே கெட்டப் பெயரை வாங்கிக் கொள்ள வேண்டாம் என நினைக்கிறார் போல.

அதனால் தான் லட்டு போல் பல விசயம் கிடைத்த போதும், வாயை மூடிக் கொண்டு அமைதியாகவே இருந்து விட்டார் வனிதா. ஆனால் வனிதா வெளியேற்றப்பட்டால் அடுத்து வரும் வாரங்கள் சுவாரஸ்யமாக இருக்குமா என்பது சந்தேகம் தான். இப்டி அவசரப்பட்டு வனிதாவுக்கு கம்மியா ஓட்டுப் போட்டுட்டீங்களே மக்கா என அவரது ரசிகர்கள் இணையத்தில் புலம்பி வருகின்றனர்.