குழந்தைகளுடனான டிவி ஷோ, திரைப்படங்களில் நெல்லை தமிழில் இவர் பேசும் வசனங்கள் என தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் இமான்.

இமான் அண்ணாச்சி என செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் திரைத்துறைக்கு வருவதற்கு முன் தான் பட்ட கஷ்டங்கள் குறித்து முதன் முறையாக மனம் திறந்து இருக்கிறார்.

சமீபத்தில் இவர் அளித்து பேட்டி ஒன்றில், ‘திரைத்துறை பற்றி ஒன்றும் அறியாமல் சொந்த ஊரான தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்தேன். ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 18 ஆண்டுகள் திரைத்துறையில் சிறு வாய்ப்புகள் கூட கிடைக்காமல் திண்டாடினேன்.

அந்த காலகட்டத்தில் பிழைப்புக்காக தள்ளுவண்டியில் காய்கறி விற்றேன். வெள்ளித்திரையில் நுழைய சின்னத்திரை உதவியது, டிவி சீரியல்களில் வாய்ப்பு கிடைத்தது. குழந்தைகளுக்கான நிகழ்ச்சி மூலம் பிரபலமானேன். அதனால் சினிமா வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. இன்று வரை 65 திரைப்படங்கள் நடித்து விட்டேன், 8 படங்கள் நடித்து வருகிறேன்’ என தான் கடந்து வந்த பாதை குறித்து பேசி இருந்தார்.