நடிகர் ராகவா லாரன்ஸ் முனி படத்தின் முன்றாம் பாகத்தை முடித்துவிட்டு தற்போது முனி படத்தின் 4 ஆம் பாகத்திற்கு தயாராகி வருகிறார். மேலும் இப்படத்திற்கான திரைக்கதையையும் தயார் செய்து விட்டார்.

இந்நிலையில் திரைக்கதை எழுதிய புத்தகத்தை கையில் எடுத்து வந்த ராகவா லாரன்ஸ் அதனை ஏழுமலையான் சன்னதியில் வைத்து இன்று காலையில் சாமி தரிசனம் செய்தார். அவருடன் அவரது குடும்பத்தினரும் வந்திருந்தனர்.

மேலும் அந்த கோவிலில் உள்ள சுற்றுப்புறங்களைப் பார்வையிட்டார். நடிகர் ராகவா லாரன்ஸை கண்ட ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் அவருடன் பேட்டி எடுக்க முயன்றனர். ஆனால் பேட்டி கொடுக்க மறுத்த அவர், தான் இங்கு கோவிலுக்கு சாமி கும்பிட வந்திருப்பதாக கூறிவிட்டு கிளம்பி சென்று விட்டார்.