தமிழக பாஜக தலைவராக பதவி வகித்து பல முறை நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளானாலும், ஒரு நல்ல மனிதராக மக்களை கவர்ந்தவர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள்.

இவர் தெலுங்கானாவின் கவர்னராக பதவி ஏற்றுள்ள நிலையில், கூடவே கிடைத்திருக்கிறது புதிய கௌரவம் ஒன்றும். அதாவது இந்தியா முழுவதும் மொத்தம் 28 கவர்னர்கள் இருக்கின்றனர்.

அவர்களுள் கடந்த 8ம் தேதி ராஜ்பவனில் பதவி ஏற்ற தமிழசை அவர்கள் தான், மிக மிக இள வயது கவர்னர் என்ற பெருமை அவருக்கு கிடைத்திருக்கிறது. ஜூன் 1961ல் பிறந்த தமிழிசை அவர்களுக்கு வயது 58, இவர் இளம் கவர்னர் பட்டத்தை பெற்றிருக்கும் நிலையில்,

ஆந்திர மாநில கவர்னரான 85 வயதான பிஷ்வ பூஷன், இந்தியாவிலேயே மூத்த கவர்னர் என்கிற பெருமையை பெற்றிருக்கிறது.