ஆந்திர முன்னணி நடிகர் நடிகைகள் மீது வெளிப்படையான பாலியல் குற்றச்சாட்டுகள் வைத்து, சினிமாவில் வாய்ப்பு தருவதாகக் கூறி என்னுடன் படுக்கை பகிர்ந்து விட்டு, வாய்ப்பு தராமல் ஏமாற்றிவிட்டனர் என்று அரைநிர்வாண போராட்டம் நடத்தினார், நடிகை ஸ்ரீரெட்டி. ஆந்திராவைச் சேர்ந்தவரான அவர் தற்போது தமிழ்நாட்டுக்கு குடிபெயர்ந்து விட்டார்.

தற்போது, தன்னுடைய வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் அவரை, பெற்றோர் உள்பட அனைவரும் ஒதுக்கியதால் ஆந்திராவை காலிசெய்துவிட்டு , சென்னையில் தனிமையில் வசித்து வருகிறார். இந்நிலையில் சென்னை வளசரவாக்கத்தில் அன்பு நகர் பகுதியில் வசித்து வரும் நடிகை ஸ்ரீரெட்டியைக் கண்டாலே அப்பகுதி மக்கள் பயப்படுகிறார்களாம்.

காரணம், அவர் கார் செல்லும் அந்தத்தெருவில், யாரேனும் இடையில் காரை நிறுத்தி இருந்தால் அவர்களை கேவலமாகத் திட்டுகிறாராம். இதற்கு அஞ்சியே அப்பகுதி மக்கள் காரை நிறுத்தி வைப்பதில்லையாம். மேலும் வெளியில் இருந்து அந்த தெருவுக்கு வரும் மக்களுக்கு இது குறித்து தெரிய வேண்டும் என்பதற்காக ” இங்கு தான் ஸ்ரீரெட்டி காரை திரும்புவார். ஆகவே யாரும் எந்த ஒரு வாகனத்தையும் இங்கு நிறுத்தாதீர்” என்று பலகையில் எழுதி வைத்துள்ளார்களாம்.