நாயகனானவுடன் திரைத்துறையில் மின்னல் வேகத்தில் முன்னணி நடிகரானவர் குறிப்பாக இந்த நடிகர் தான். என்றாலும் தனக்கான நாயகன் வாய்ப்பை பெற பெரும் சவால்களை எதிர்கொண்டவர்.இப்படி இருக்க, குறிப்பிட்ட நடிகருடன் தங்கையாக நடித்து தமிழ் சினிமாவின் இளம் நாயகி ஒருவர் சொன்ன வார்த்தை, ‘இருவருக்குமிடையே நெருக்கம்’ என்பது போல கிசு தீயை பற்ற வைத்து தற்போது இருக்கிறது.

முன்னதாக இளம் நடிகையின் திரைப்படத்தையும் தயாரித்து நாயகியின் மார்கெட் உயர வழிசெய்தார் நம் கதாநாயகன். தொடர்ந்து முன்னணியில் இருக்கும் நாயகனின் திரைப்படத்தில் ஜோடியாக நச்சரித்தவரை, வேறு வழியின்றி தனக்கு சகோதரியாக ஒரு திரைப்படத்தில் நடிக்க தற்போது வைத்தார்.

என்றாலும் நாயகனுடன் ஒரு திரைப்படத்திலாவது நாயகியாக ஜோடி சேர்ந்து விட வேண்டும் என்கிற ஆசையில், ‘அவர் அழைத்தால் அடுத்த படத்தில் இலவசமாகவே நடித்து கொடுக்கிறேன்’ என இளம் நடிகை பிட்டு போட, பட வாய்ப்பு வந்ததோ இல்லையோ, திரையுலகில் பரவிய காதல் வதந்தியால் நடிகரின் வீட்டில் பிரச்சனை வந்ததுதான் தற்போது மிச்சம்.