சீமான் சினிமாத்துறையில் இருந்து வந்தவர் என்பது சிலருக்கு தெரியும். இயக்குனராக இருந்தவர். தற்போது தீவிர அரசியலில் இறங்கிவிட்டார். அமீரா என்ற படத்தில் அவரும் நடிகர் ஆர்.கே.சுரேஷ் நடிக்கிறார்கள். ஹீரோயினாக மலையாள நடிகை அனு சித்தாரா நடிக்கிறார்.

எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு ஆகியோர் படத்தில் நடிக்க சீமானிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ரா. சுப்ரமணியன் இப்படத்தை இயக்குகிறாராம்.

விஷால் சந்திர சேகர் படத்திற்கு இசையமைக்க டூ லெட் படத்தின் இயக்குனர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறாராம். சென்னை மற்றும் தென்காசியில் 40 நாட்கள் நடைபெற்றதை தொடர்ந்து இறுதிக்கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெறுகிறது.