திமுக, அதிமுக என தமிழக அரசியல் கட்சிகள் ஆளுக்கொரு டிவி சேனல்களை ஆரம்பித்து, தங்களை தாங்களே புகழ்ந்து கொண்டிருக்க நடிகர் கமல் ஹாசனனும் டிவி சேனல் ஒன்றை துவங்க இருப்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சினிமாவில் உலகநாயகனாக கோலோச்சி தற்பொழுது அரசியலிலும் களம்கண்டு இருக்கிறார் நம்மவர் கமல்ஹாசன். சென்ற வருடமே ‘மக்கள் நீதி மய்யம்’ எனும் கட்சியை ஆரம்பித்து முழு நேர அரசியல்வாதியாகிவிட்டார்.

இந்நிலையில், திமுக-அதிமுக கட்சிகளை போலவே தங்களது பெருமையை மக்களுக்கு பறைசாற்ற டிவி சேனல் ஒன்றை துவங்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்.

இதற்காக நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் டிவி சேனல் ஒன்றை வாங்க டீல் பேசி வரும் கமல், கிடைக்கவில்லை என்றாலும் புதிதாக சேனல்துவங்கி அதற்கு ‘நம்மவர் டிவி’ என பெயர் சூட்டவும் தயாராக இருக்கிறாராம்.