ஜெயம் ரவி நடிப்பில் கோமாளி படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழகத்தில் மட்டுமே இப்படம் ரூ 42 கோடி வரை வசூல் செய்துள்ளது, அதோடு இப்படத்தின் தமிழக விநியோகஸ்தர்கள் ஷேர் மட்டும் பல கோடிகளாம்.

இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், வாங்கிய தொகையை விட ரூ 10 கோடி அதிக லாபம் கோமாளி படத்திற்கு கிடைத்துள்ளதாம்.

இந்த வருடத்தில் இதற்கு முன் விஸ்வாசம் ரூ 20 கோடிகளுக்கு மேல் லாபம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.