பிக்பாஸ் வீட்டில் உள்ள லாஸ்லியா-கவின் காதலை கிண்டலடிக்கும் வகையில் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ள கருத்து லாஸ்லியா ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது.

பிக்பாஸ் முதல் சீசனின் ஓவியா-ஆரவ் காதல் போல தற்போதைய சீசனில் கவின் – லாஸ்லியா காதல் பார்க்கப்படுகிறது. சமூக வலைத்தளங்களிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ரசிகர்கள் அவர்களின் காதலை பற்றியே விவாதிக்கிறார்கள்.

இந்நிலையில், சமீபத்தில் அந்நிகழ்ச்சிக்கு சென்று சில நாட்கள் மட்டும் இருந்துவிட்டு, நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘சில லூசு பொண்ணுங்களுக்கு அவங்களுக்கு நல்லது பண்ணுறவங்களை விட துரோகம் பண்ணுறவங்களைதான் பிடிக்குது..ஏன்?’ என லாஸ்லியாவை கிண்டல் அடித்தடித்திருந்தார்.

இதனால் கோபமடைந்த லாஸ்லியா ரசிகர்கள் ‘வனிதா வாயிலேயே போட்டு அனுப்புனப்போ நல்ல வாங்கிட்டு தானே வந்தீங்க…இப்போ என்ன சூர புலி ஆகிட்டீங்க… ட்விட்டர்ல பேசுனா பத்தாது செல்லம்…கொஞ்சம் பேச வேண்டிய இடத்துலயும் பேசணும்.. இல்லனா..அர்ஜுன் சர் சொல்றா மாதிரி பொத்திக்கிட்டு இருக்கணும்’ என கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.