தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு தேவதையாக இருந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. பின்னர் அவர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார். அதனை தொடர்ந்து ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள் உள்ளனர்.அவர்களது மூத்த மகளான ஜான்வி கபூர் கடந்த ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் முதன் முதலாக அடியெடுத்து வைத்தார்.

அதனை தொடர்ந்து அவர் தற்போது படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி தற்போது வருகின்றார்.மேலும் தமிழில் அவரது தந்தை போனிகபூர் தயாரிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அவரது தயாரிப்பிலேயே மீண்டும் அஜீத்தின் அடுத்த படம் உருவாக்கவுள்ளது. இந்த படத்தில் ஜான்வி கபூர் நடிக்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஜான்வியின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாவதும், சர்ச்சையாவதும் வழக்கமான ஒன்றாக தற்போது உள்ளது. இந்நிலையில், அவர் தற்போது ஆங்கில பத்திரிக்கை ஒன்றின் அட்டைப்படத்திற்கு படு சூடான கேவலமான போஸ் கொடுத்துள்ளார்.அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.