ரஜினிகாந்த் நடித்து வரும் தர்பார் திரைப்படத்தின் இரண்டாவது போஸ்டர் இன்று மாலை வெளியாகவுள்ளது.

லைக்காவின் புரோடக்க்ஷனில் ஏ.ஆர்.முருக தாஸ் இயக்கி வரும் தர்பார் திரைப்படத்தில் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ரஜினிகாந்த் காவலராக நடித்து வரும் இப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி படப்பிடிப்பை ஆரம்பித்தது.

தர்பாரின் முதல் போஸ்டரிலேயே மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் இரண்டாவது போஸ்டர் இன்று மலை 6 மணிக்கு வெளியாகும் என லைக்கா புரோடக்க்ஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும், இப்படம் ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் தினத்தன்று வெளியாகும் என எதிர் பார்க்கப் படுகிறது