பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது 80 வது நாளை நெருங்கிவிட்டது. இதில் தற்போது சாண்டி, கவின், லாஸ்லியா, முகென், தர்ஷன், வனிதா, ஷெரின் என 7 பேர் தற்போது போட்டியாளர்களாக உள்ளே இருக்கிறார்கள்.

இதில் முகெனை தவிர மற்ற அனைவரும் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அடுத்த வாரம் யார் வெளியேறப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

இதற்கிடையில் கவின் லாஸ்லியா மீதுள்ள தன் காதலுக்கு சம்மதமா என முடிவை மறைமுகமாக கேட்க அது அப்படியே வெளிப்படையாக தெரிந்தது. ஆனால் ஏற்கனவே சேரன் அவர்களிடம் இங்கே இதுபற்றி பேச வேண்டாம். வெளியே பார்த்துக்கொள்ளலாம் என அவர் வெளிவரும் முன் கூறியிருந்தார்.

அதற்கு முன்பே லாஸ்லியாவும் இதே போல கவினிடம் கூறிவிட்டார். ஆனால் கவின் மீண்டும் லாஸ்லியாவை வலியுறுத்துவது குறித்து கேள்வி கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் சமூக வலைதளத்தில் சிலர் டிவி சானல் டிஆர்பிக்காக கவின் லாஸ்லியாவை அசிங்கப்படுத்துறத நிறுத்துங்க .. அவங்க உணர்வுகளகோட விளையாடாதீங்க என கூறிவருகிறார்கள்.

அதே போல பிக்பாஸ் சீசன் 1 பிரபலம் கவின் லாஸ்லியா காதல் பெர்சனல் இல்லயா ஆண்டவரே. உங்க வார்த்தைகள சேரப்பா எப்படி மறக்கலாம், சேரப்பா, வனிதா மீது தவறுள்ளது, சேரப்பா அவர்கள் இருவரையும் டார்கெட் செய்ய அதை பிக்பாஸ் யூஸ் பண்ணிக்கொள்கிறார்கள் என கேட்டுள்ளார்.