நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் பல படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அப்படி அவர் நடித்த படம் பாஸ் என்கிற பாஸ்கரன், யுத்தம் செய், வேட்டைக்காரன், நாடோடிகள் என பல்வேறு படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தாலும் அவருடைய கதாபாத்திரம் மக்களிடம் சென்றடையவில்லை. அதன்பின் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதில் இவர் முழுக்க முழுக்க கட்டபஞ்சாயத்து செய்து வந்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் இவரை கலாய்த்தும் மீம்ஸ் போட்டும் இவரை பிரபலப்படுத்தினார்.

இதனால் அனைத்து தரப்பினரிடையே லட்சுமி ராமகிருஷ்ணன் பிரபலமானார். இந்நிலையில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இளமைப்பருவ புகைப்படம் வெளியாகி அதில் அவருடைய மூன்று பெண் பிள்ளைகளுடன் அவர் இருக்கும் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் இவரா அவர் என ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.