பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் ஷெரின் மற்றும் தர்ஷன் இருவர் உறவு குறித்து வனிதாவுக்கும் ஷெரினிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஷெரினிடம், தர்ஷனுக்கு வெளியில் காதல் இருக்கும் போது நீ தர்ஷனிடம் இப்படி பழகினால் அதற்கு பெயர் கள்ளத்தொடர்பு தான் என்று கூறியிருந்தார் வனிதா.

இதனால் கடும் கோபமடைந்த ஷெரின் வனிதாவிடம் சண்டை போட்டார். வனிதா இப்படி சொன்னது ரசிகர்களை கூட முகம் சுளிக்க வைத்தது.

மேலும், இந்த விஷயத்தில் தர்ஷனும் வனிதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கடந்த சில வாரமாகவே வனிதாவை வச்சு செய்து வருகிறார் கமல். அதிலும் நேற்றைய நிகழ்ச்சியில் வனிதா மற்றும் வனிதா பஞ்சாயத்து கமலுக்கு கிடைத்ததால் கமலுக்கு பஞ்சாமிர்தம் கிடைத்தது போல ஆகிவிட்டது. இதனால் நேற்றைய நிகழ்ச்சியில் வனிதாவை கமல் வச்சி செய்தார். கமல், வனிதாவை கலாய்க்கும் போதெல்லாம் அடிக்கடி ஒரு பெண் கைதட்டிக் கொண்டே இருந்தார்.

அது வேறு யாருமில்லை சரின் இன்தாயார் தான். ஆனால் தனது தாயார் நேற்று நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார் என்பதுஷெரீனுக்கு தெரியுமா, தெரியாதா என்பது தெரியவில்லை. அதேபோல இந்த வாரம் ஷெரின் நாமினேஷனில் இடம் பெற்றுள்ளதால் ஒருவேளை இந்த வாரம்ஷெரின் வெளியேற்றப்படலாம் என்று அவரது தாயார் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்திருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.