தமிழ் திரைத்துறையில் அதிவேகமாக வளர்ந்து வருகின்ற நடிகைகளில் ஒருவர்தான் கோவையை சேர்ந்த தமிழ் நடிகையான அதுல்யா இரவி ஆவர்.

தமிழ் சினிமா இரசிகர்கள் அதுல்யாவிற்கு ஒரு சிறப்பு துணை பெயரினை கொடுத்துள்ளனர். அதுல்யாவின் கண்கள் மற்ற நடிகைகளை விட மிகவும் மனதை கவரும் வண்ணத்தில் இருப்பதால் அவருக்கு கண்ணழகி அதுல்யா என பெயர் வைத்து அழைக்கின்றனர். அதுல்யா கோலிவுட் திரையில் ஒரு சில படத்தில் மட்டுமே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

அதுல்யாவின் சிறந்த தோழியாக இருப்பவர் இந்துஜா இரவிச்சந்திரன் ஆவர். இந்துஜா மற்றும் ஆர்யா நடிப்பில் தற்போது வெளியாகி உள்ள திரைப்படம் மகாமுனி ஆகும். இந்த திரைப்படம் இன்று வெளியானது, இதனை அதுல்யா மற்றும் இந்துஜா இப்படத்தின் கதாநாயகனான ஆர்யாவுடன் இணைத்து படத்தை பார்த்தார்கள். பின்னர் அதுல்யா படத்தை பற்றிய அனுபவத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, இந்த சிறந்த தரமான படத்தை இயக்கிய சந்தகுமாருக்கு நன்றி மற்றும் சிறப்பாக நடித்துள்ள ஆர்யா மற்றும் துணை நடிகர், நடிகைகளுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.