பிக்பாஸ் வீட்டிற்குள் இரண்டாவது முறையாக வந்த சாக்ஷியை கமல் மேடையில் அழைத்து அசிங்கப்படுத்திவிட்டார்.

இன்று சனிக்கிழமை என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களை கமல் சந்திக்கிறார். இதற்காக முதல் புரமோ வெளியானது. அதில் நேர்மையாக விளையாட வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் பேசினார் கமல்.

இந்நிலையில் இன்றைய எபிசோடின் இரண்டாவது புரமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் சாக்ஷியை மேடைக்கு அழைத்து கமல் உண்மையை நிரூபிக்கும வகையில் பேசுவதாக அமைந்துள்ளது.

அதாவது, இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்குள் விருந்தாளிகளாக மோகன் வைத்யா, அபிராமி, சாக்ஷி ஆகியோர் அழைத்து வரப்பட்டனர். அவர்களில் அபிராமி எதையும் கண்டுகொள்ளாமல் பழையப்படி இருந்தார்.

ஆனால் மோகன் வைத்யாவும் சாக்ஷியும் தங்களின் கோபத்தை காட்டும் வகையில் நடந்துகொண்டனர். இந்நிலையில் தர்ஷன், ஷெரின் இடையிலான உறவு குறித்து பேசினார் வனிதா. இதனால் அதிர்ச்சியடைந்த ஷெரின், கத்தி கூப்பாடு போட்டார்.

மேலும் தனக்கும் தர்ஷனுக்கும் இடையில் இருப்பது வெறும் நட்பு மட்டும்தான் என்றும் பிரகடனப்படுத்தினார். இதுதொடர்பான சண்டையின் போது வனிதாவிடம் பேசிய சாக்ஷி, ஷெரின் – தர்ஷன் நட்பு க்யூட்டாக இருக்கிறது என மக்கள் ரசிக்கிறார்கள் என்று கூறினார்.

ஆனால் ஷெரினிடம் ரோட்டில் குரைக்கும் நாய்கள் குரைக்கட்டும் என்று மக்களை நாய்கள் என கூறி அவருக்கு ஆறுதல் கூறினார். சாக்ஷி மக்களை நாய்கள் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் சாக்ஷி மன்னிப்பு கேட்கவேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், வனிதாவிடம் ஒன்றும் ஷெரினிடம் ஒன்றும் பேசியது தொடர்பாக கமல் சாக்ஷியை மேடைக்கு அழைத்து கேள்வி கேட்பது புரமோவில் தெரியவந்துள்ளது. சாக்ஷி, இருவரிடமும் இருவேறு விதமான கருத்துக்களை கூறியதற்கு மக்களும் சாட்சி சாக்ஷியும் சாட்சி என கூறுகிறார் கமல்.

சாக்ஷி, தனது வாயால் சர்ச்சையில் சிக்கினார். விருந்தாளியாக வந்த அவரை மேடைக்கு அழைத்து கமல் அசிங்கப்படுத்திவிட்டார். சாக்ஷி நாய் என்று கூறியதற்காக அவரை கமல் நிகழ்ச்சியில் மன்னிப்பு கேட்க சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்துப்பார்போம், கமல் கண்டிக்கிறாரா என்று?!