என்னதான் ‘சமூக வலைத்தளங்கள் சமூக சீரழிவுக்கு காரணமாக உள்ளன’ என விமர்சிக்கப்பட்டாலும், திறமை உள்ளவர்கள் என்றால் தெருக்கோடியில் இருப்பவரையும் பிரபலத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றுவிடும் வலிமையையும் அதற்கு உண்டு.

இப்படிப்பட்ட சமூக வலைத்தளங்களில் பார்ப்பவர்களை ஆச்சர்யத்தில் வாய்பிளக்க செய்து பிரபலமாகி வருகின்றனர், நாகபட்டினத்தை சேர்ந்த ஸ்ரீ சகோதரிகள்.

அழகான தமிழ் உச்சரிப்பில், தங்களது வீடியோவை பார்ப்பவர்களுக்கு வணக்கம் சொல்லும் இந்த சிறுமிகள், தங்களது இனிய குரல் வளத்தினால் 90களை சேர்ந்த பாடல்களை பாடி அசத்தி வருகின்றனர்.

இவர்களது திறமையை கண்டு வியந்த, திரையுலகினர் பலரும் இவர்களை தொடர்பு கொண்டு வாழ்த்தி வருவதாகும், இந்த குட்டீஸ் தங்களது சமீபத்திய வீடியோவில் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து இருக்கின்றனர்.