தனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த நிகழ்ச்சியின் மூலம் உலக தமிழர்களின் மனதை கொள்ளையடித்தனர் அந்த அக்கட தேசத்து நடிகை. இதனால் ஒட்டுமொத்த தமிழகமும் நடிகையை தலையில் வைத்து கொண்டாடினர்.

கூடவே படவாய்ப்புகளும் வீட்டு வாசலில் வந்து குவிந்து நிற்க, முன்னனி நாயகிகளுக்கு இணையாக சம்பளம் கேட்டு வந்தவர்களை விரட்டி அடித்தார். மேலும் வந்தவரைக்கும் லாபம் என்று இல்லாமல், நாயாகி முக்கியத்துவம் உள்ள கதைகள் வேண்டும் என கூறி மீதி இருந்த வாய்ப்புகளையும் தொலைத்தார்.

நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்திற்கு பின்னர் வெறும் மூன்று படங்களில் மட்டுமே நடித்த அவர், படங்கள் சரியாக போகாததால் கிடைத்த பிரபலத்தை தக்க வைக்க முடியவில்லை.

தற்பொழுது பழையபடி கேட்பாரற்று கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட நடிகை, வாய்ப்புகள் வந்தப்பையே நடித்திருக்கலாம் என நட்புவட்டாரங்களிடம் புலம்பி வருகிறாராம்.