பெங்களுரு இஸ்ரோ மையத்தில் உரையாற்றிவிட்டு செல்லும் போது கண்ணீர் விட்டழுத இஸ்ரோ தலைவர் சிவனை, இந்திய பிரதமர் கட்டியணைத்து ஆறுதல் கூறி தேற்றினார்.

சந்திரயான்-2 திட்டத்தின் கடைசி நேரத்தில் லேண்டர் விக்ரமையின் தொடர்பு துண்டிக்கபட்டது. தரையிறங்குவதற்கு 2.1 கி.மீ இருந்த நிலையில் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று செப்டம்பர் 7ம் திகதி பெங்களுரு இஸ்ரோ மையத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, விஞ்ஞானிகளிடையே உரையாற்றினார். நண்பர்களே சில மணிநேரங்களுக்கு முன்பு என்ன நடக்கிறது என்பதை என்னால் உணர முடிந்தது, உங்கள் கண்கள் நிறைய தெரிவிக்கின்றன. இந்தியாவை பெருமை படுத்துவதற்காக நீங்கள் வாழ்கிறீர்கள், நான் உங்களுக்கு மரியாதை செலுத்துகிறேன்.

கடந்த சில மணி நேரம் நாடு முழுவதும் கவலையாக இருந்தது. ஆனால், அனைவரும் நமது விஞ்ஞானிகளுடன் ஒற்றுமையுடன் நிற்கிறார்கள். நமது விண்வெளித் திட்டத்தால் நாம் பெருமைப்படுகிறோம். சந்திரனைத் தொடுவதற்கான நமது தீர்மானம் இன்னும் வலுவடைந்துள்ளது.

நாம் வெற்றியின் புதிய உயரங்களை எட்டுவோம். இந்தியா உங்களுடன் உள்ளது என நான் விஞ்ஞானிகளுக்கு வலியுறுத்த விரும்புகிறேன். நீங்கள் தேசிய முன்னேற்றத்திற்கு நம்பமுடியாத பங்களிப்பை வழங்கிய விதிவிலக்கான தொழில் வல்லுநர்கள்.

மிக விரைவில் ஒரு புதிய விடியலும் பிரகாசமும் பிறக்கும். அறிவியலிலுக்கு தோல்வி இல்லை, சோதனை மற்றும் முயற்சிகள் மட்டுமே என விஞ்ஞானிகளை ஊக்குவித்து பிரதமர் மோடி உறையாற்றினார்.

பெங்களுரு இஸ்ரோ மையத்தில் உரையாற்றிவிட்டு செல்லும் போது கண்ணீர் விட்டழுத இஸ்ரோ தலைவர் சிவனை, இந்திய பிரதமர் கட்டியணைத்து ஆறுதல் கூறி தேற்றினார்.