இருட்டு அறையில் முரட்டு குத்து பட நடிகை யாஷிகா ஹீரோயினாக நடித்துள்ள ஸாம்பி படம் இன்று திரைக்கு வருகிறது. அதன் ப்ரோமோஷனுக்காக யாஷிகா ட்விட்டரில் ரசிகர்களிடம் பேசினார்.

“பிக்பாஸ் செல்லும் முன்பு இளைஞர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் எனக்கு இருந்தது. பிக்பாஸ் சென்றுவந்த பிறகு என்னுடைய உண்மையான கேரக்டருக்காக மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது” என கூறியுள்ளார்.

இந்நிலையில் அஜித் பற்றியும் சில ரசிகர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர் “அஜித் சார் தான் Inspiration. அவரது விஸ்வாசம் படத்தில் அப்பா-மகள் செண்டிமெண்ட் சிறப்பாக இருந்தது” என கூறியுள்ளார்.

மேலும் விஜய் பற்றி பேசிய அவர் “விஜய் எப்போதும் பாசிட்டிவ்வாக இருப்பவர். பிகில் படத்திற்கு வெறித்தனமா காத்திருக்கிறேன்” என கூறியுள்ளார்.