சென்னையில் கணவன் ஒருவர் திருமணமாகி ஒரு வாரத்திற்குள் மனைவியை அடித்துக் கொன்று தூக்கில் தொங்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த திரிசூலம் பகுதியைச் சேர்ந்தவர் அபின்ராஜ். இவர் வேன் சாரதியாக பணியாற்றி வருகின்றார். இவரும் மனிஷா என்ற பெண்ணும் 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்வதாக கூறி மனிஷாவை அவரது வீட்டிலிருந்து அழைத்து, தனது சொந்தக்காரர் வீட்டில் தங்க வைத்துள்ளார் அபின்ராஜ். நாட்களும் சென்று கொண்டிருக்க காதலனை நம்பி வீட்டை விட்டு வந்த நிலையில் திரும்பி வீட்டிற்கு செல்லமுடியாமல் தவித்துள்ளார் மனிஷா.

இந்நிலையில் ஆறு மாதத்திற்கு முன்பு கர்ப்பமாக இருந்த மனிஷாவினை உறவினர் வீட்டிலும் தங்க வைக்க முடியாததால் தனியாக வீடு எடுத்து இருவரும் தங்கியுள்ளனர். அப்பொழுது இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனிஷாவின் வயிற்றில் அபின்ராஜ் குத்தியதால் கர்ப்பம் கலைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

இந்நிலையில் தனது பெற்றோர்கள் முன்னிலையில் மனிஷாவை திருமணம் செய்து கொண்ட அபின்ராஜ் ஒரு வாரத்திற்கு தங்களது மகள் தூக்குபோட்டு இறந்துவிட்டார் என்ற தகவலை மனிஷாவின் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

தனது மகள் வாழ்வில் ஏற்பட்ட பிரச்சினை எதுவும் தெரியாமல் பெற்றோர்கள் இறுதிச் சடங்கினை முடித்துள்ளார். அதன் பின்பு மனிஷாவின் செல்போனை பார்த்தபோது அதில் ஷாக் ஆடியோ ஒன்று இருந்துள்ளது. அந்த ஆடியோவில், அபின் ராஜுக்கு வேறு ஒரு பெண்ணோடு தொடர்பு இருந்ததும், அந்தப் பெண்ணிடம் மனிஷா தாலி பிச்சை கேட்டு அழுததும், ஏற்கெனவே கர்ப்பம் கலைந்தது குறித்தும் பேசியதைக் கேட்டு அதிர்ந்து போயினர்.

உடனே தனது மகள் கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகப்பட்டு மனிஷாவின் பெற்றோர் பொலிசில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து அபின் ராஜை கைது செய்த பொலிசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.