தற்போது பிக்பாஸ் சீசன் 3 கமல்ஹாசன் தொகுத்து வழங்க விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட எழுபது நாட்களை கடந்துவிட்ட பிக்பாஸ் சீசன் 3 தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 8 பேர் மட்டுமே உள்ளனர்கவின், சாண்டி, சேரன், ஷெரின், தர்சன் , வனிதா, முகென், லாஸ்லியா ஆகிய 8 பிரபலங்கள் விளையாடி வருகின்றனர். வனிதா பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழைந்ததில் இருந்து பல பிரச்சினைகள் வெடித்தது. இந்நிலையில் பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் தற்போது உள்ளனர்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட்கார்ட் என்ட்ரி மூலம் யார் வருவார்கள் என எதிர்பார்த்த நிலையில் சாக்ஷி, அபிராமி மற்றும் மோகன் வைத்யா ஆகியோர் தற்போது விருந்தினராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். இந்நிலையில் ஒவ்வொரு நாளையும் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இந்நிலையில் பிக்பாஸ் குறித்து நகைச்சுவை நடிகரும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான தாடி பாலாஜி பேட்டி ஒன்று தற்போது அளித்துள்ளார்.

அப்பொழுது அவர் கவின் குறித்து பேசுகையில் கவின் மிகவும் நல்ல பையன் கலகலப்பாக எப்போதும் இருக்கக்கூடியவன். அதிகமாக கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்துள்ளான்.அதை யோசித்து அவன் நன்றாக விளையாட வேண்டும். அடுத்தவன் ஜெயிக்க வேண்டும் என்று நினைத்தால் இவர் ஏன் பிக்பாஸ் வீட்டிற்குள் ஏன் செல்லவேண்டும் என மிகவும் வருத்தத்துடன் பேசியுள்ளார்.மேலும் லாஸ்லியா பட்டாம்பூச்சி போல, அவரை எப்போதும் பார்த்து ரசிக்கலாம், ஆனால் குடும்பம் நடத்த முடியாது என்றும் அவர் தற்போது கூறியுள்ளார்