நடிகர் அஜித் குமாரின் மனைவி சாலினி குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் வாயடைத்து போயுள்ளனர். அஜித் மகள் அனோஷ்கா அடையாளம் தெரியாத அளவு வளர்ந்து விட்டார்.

அழகில் சாலினியையும் மிஞ்சி விடுவார் போல இருக்கின்றது. அஜித் – சாலினி ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியிலும், மனதிலும் தனி இடம் உள்ளது

நிஜ வாழ்க்கையில் அஜித் போல அத்தனை நேர்மறை எண்ணங்கள், தைரியம், தன்னம்பிக்கை கொண்ட ஒரு நபரை காண்பது மிகவும் அரிது.

மனைவியின் கனவுகளுக்காக உழைக்கும், உறுதுணையாக நிற்கும் கணவன் அஜித். கணவனின் பெரும் துயர் காலத்தில் பக்கபலமாக இருந்து மரணத்தின் பிடியில் இருந்து மீட்டெடுத்து வந்தவர் மனைவி ஷாலினி.

அவர்கள் எதை செய்தாலும் ரசிகர்கள் வைரலாக்கி விடுகின்றனர். இந்நிலையில் குழந்தைகளுடன் வெளியில் சென்ற புகைப்படத்தினையும் வைரலாக்கி லைக்குகளை குவித்து வருகின்றனர்.