நேர்கொண்ட பார்வை என்ற படத்தை நல்ல முறையும் ரீமேக் செய்து அதற்கு பாராட்டும் பெற்றுவிட்டார் வினோத். அடுத்தும் அஜித்தை வைத்து அவரது 60வது படத்தை இயக்குகிறார்.

இந்த படம் ரீமேக் என கூறப்பட்டாலும் வினோத் அவர்கள் இது என்னுடைய கற்பனை கதை என்று கூறிவிட்டார். இப்படத்தை தயாரிக்க போகும் போனி கபூர் எப்போதும் பட அப்டேட்டுகளை வெளியிட்டுவிடுவார்.

ஆனால் அஜித்தின் 60வது படத்தின் பூஜை ஆகஸ்ட்டில் நடக்கும் என்று கூறியதை தவிர்த்து வேறு எந்த அப்டேட்டையும் விடவில்லை.

இதனால் காத்திருந்து சோகமான ரசிகர்கள் 60வது பட அப்டேட் வேண்டும் என்று #WhenIsTHALA60Pooja இந்த டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.