பொதுவாகவே நடிகர் எம்.ஜி.ஆரை தொப்பில்லாமல் திரையில் பார்ப்பது அரிது.

அந்த தொப்பிக்குள் அப்படி என்ன இருக்கின்றது என்று என்றாவது சிந்தித்தது உண்டா? சிறு வயது முதலே தொப்பி மற்றும் கண்ணாடி மீது அவருக்கு அதிக ஈர்ப்பும்,ஆசையும் இருந்துள்ளது.

ஆரம்பத்தில் இதனால் தான் தொப்பி அணிவதை வழக்கமாக கொண்டிருந்தாராம். ஆனாலும், இன்று வரை இந்தளவு பிரபலமான தொப்பிக்கு பின்னால் சில இரகசியங்களும், உண்மைகளும் மறைந்திருக்கின்றன.
படங்களில் மட்டும் தொப்பி பயன்படுத்தி வந்த எம்ஜிஆர்-ஐ நிஜ வாழ்க்கையிலும் தொப்பி பயன்படுத்த வைத்த படம் அடிமைப்பெண்.

படப்பிடிப்பின் போது அதிக வெயில் அவரை வாட்டி எடுத்ததுள்ளது. படப்பிடிப்பு காண வந்த ரசிகர் ஒருவர் இதை கவனித்து எம்ஜிஆர்-க்கு வெள்ளை நிற புஸ்குல்லா பரிசளித்துள்ளார். இந்த தொப்பியால் எம்ஜிஆர் அந்த வெயிலில் சற்று இலகுவாக பணியாற்ற முடிந்தது.

இந்த தொப்பி எம்ஜிஆர்-க்கு பொருத்தமாகவும்,, அழகாகவும் இருப்பதாகவும் குவிந்த பாராட்டுக்கள், இந்த தொப்பி எம்.ஜி.ஆர் தலையில் நிரந்தர இடம் பிடிக்க காரணம் ஆனது.

எம்ஜிஆர்-க்கு மிகவும் பிடித்துப்போன இந்த தொப்பியை ரசாக் எனும் தொப்பி தயாரிப்பாளர் பிரத்யேகமாக தயாரித்து தர துவங்கினார். இறுதி காலம் வரை இவர் தான் எம்ஜிஆர்-க்கு தொப்பி தயாரித்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதேவேளை, எம்ஜிஆர் என்றால் அனைவருக்கும் மனதில் தோன்றும் தோற்றத்தில் பெரும்பங்கு இந்த தொப்பியும், கருப்பு கண்ணாடியும் தான் இடம்பெறும். அந்தளவிற்கு எம்ஜிஆர்-ன் அடையாளமாக மாறியது இந்த வெள்ளை தொப்பி. எம்ஜிஆர் இறந்த போதிலும் கூட இந்த வெள்ளை தொப்பியுடன் தான் அடக்கம் செய்தனர்.