பிக்பாஸ் வீட்டை விட்டு யார் வெளியேற நீங்கள் நினைக்கிறீர்கள், சொல்லுங்கள் என்று கமல் போட்டியாளர்கள் ஒவ்வொருவரிடமும் கேட்டார்.

அதன் படி லாஸ்லியாவிடம் வந்த போது, இந்த வீட்டில் வனிதா அக்கா கண்டிப்பாக இருக்கனும், நான் வெளியே போக வேண்டும்.

வனிதா அக்கா ஏன் இருக்க வேண்டும் என்றால், அவங்க தான் இந்த வீட்டில் டக்கு, டக்கு என்று கேள்வி கேட்டுகிறாங்க, ஒரு பரபரப்பாக இருக்கு, இந்த வாரம் கூட, ஏதோ ஒரு டாஸ்க்கில் அவர் சரியாக கேள்வி கேட்டார். போட்டி சுவாரஸ்யமாக இருக்கும்.

நான் போட்டியில் கான்செண்ட்ரேட் பண்ணவில்லை, என்னுடைய எண்ணம் எல்லாம் விளையாட்டின் மீது இல்லை, அதனால் நான் வெளியேற வேண்டும் என்று நினைப்பதாக கூறினார்.