தற்போது பெரு நாட்டில் கடற்கரை பகுதியில் சுமார் 227 குழந்தைகளின் எலும்பு கூடுகள் மொத்தமாக கண்டறியப்பட்டுள்ளது.இந்த சம்பவம் பெரு நாடு மற்றுமில்லாமல் அனைத்து நாடுகளிலும் தற்போது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இந்த சம்பவம் குறித்த தகவல்கள் பின்வருமாறு காணலாம்.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து பெரு நாட்டின் தலைநகரமான லீமா கடற்கரையின் பக்கத்தில் உள்ளபலியிடும் தளத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டிருந்தனர் ஆரம்பத்தில் அவர்களின் தேடுதலின் விளைவாக 50 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டது தற்போது 227 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட ஒரு அதிகாரி கூறுகையில் அந்த காலத்தில் கடவுளை மகிழ்விப்பதற்காக வும்இயற்கையை சமாதானப்படுத்துவதற்காகவும் 8 முதல் 15 வயதுள்ள குழந்தைகளை பலியிடும் வழக்கத்தைக் கொண்டிருந்ததாக தற்போது அவர் கூறியுள்ளார் தற்போது இது உலக அளவில் பெரும் பிரச்சினையாக கிளம்பி உள்ளது